இலங்கை

ரவி கருணாநாயக்க தொடர்பில் ஜனாதிபதியே தீர்மானிக்க வேண்டும் – கூட்டு எதிர்க்கட்சி


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே தீர்மானிக்க வேண்டுமென கூட்டு எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் ஊழல் மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஓர் அமைச்சருக்கு பதிலீடாக வேறு ஒர் அமைச்சரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியே ரவி கருணாநாயக்கவை நிதி அமைச்சிலிருந்து, வெளிவிவகார அமைச்சிற்கு மாற்றினார் என சுட்டிக்காட்டியுள்ள அவர் வெளிவிவகார அமைச்சர் ஒருவர் தொடர்பிலான நம்பிக்கை மிகவும் முக்கியமானது என   சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச சமூகத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான ஓர் ஊடகமாக வெளிவிவகார அமைச்சரே செயற்பட்டு வருகின்றார் எனவும் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் அரசாங்கத்தினது நன்மதிப்பை வலுவிழக்கச் செய்யும் எனவும் ஜீ.எல்.பீரிஸ்  குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply