Home இலங்கை ஹன்ரரின் சில்லுக்கு சுடுமாறே உத்தரவிட்டேன் – உப பொலிஸ் பரிசோதகர் நீதிமன்றில் வாக்கு மூலம்

ஹன்ரரின் சில்லுக்கு சுடுமாறே உத்தரவிட்டேன் – உப பொலிஸ் பரிசோதகர் நீதிமன்றில் வாக்கு மூலம்

by admin
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஹன்ரை வடிவா பார்த்து கீழ் நோக்கி சில்லுக்கு சுடுமாறு முபாரக்கு உத்தரவிட்டேன். முபாரக் சுட்டார் என வட­மராட்சி கிழக்கு துப்­பாக்­கிச் சூட்­டுச் சம்­ப­வம் தொடர்­பில் கைது செய்­யப்­பட்­டுள்ள உப­பொ­லிஸ் பரி­சோ­த­கர் சஞ்­சீ­வன் நீதிமன்றில வாக்­கு­மூ­லம் அளித்துள்ளார்.
யாழ். வட­ம­ராட்சி கிழக்­குப் பகு­தி­யில் துப்­பாக்­கிச் சூட்­டுச் சம்­ப­வத்­தில் இளை­ஞர் ஒரு­வர் உயி­ரி­ழந்­தமை தொடர்­பான வழக்கு நேற்று பருத்­தித்­துறை நீதி­மன்­றில் விசா­ர­ணைக்கு எடுத்­துக் கொள்­ளப்­பட்­டது.
சந்­தே­க­ந­பர்­க­ளில் ஒரு­வ­ரான உப பொலிஸ் பரி­சோ­த­கர் சஞ்­சீ­வன், உயி­ரி­ழந்­த­வ­ரின் தாய் மற்­றும் சகோ­தரி ஆகி­யோர் அதன் போது நீதி­மன்­றில் வாக்­கு­மூ­லம் வழங்­கி­னர்.
மணலுக்குள் புதைத்து கஞ்சா கடத்துவதாக தகவல். 
உப பொலிஸ் பரி­சோ­த­கர் வாக்­கு­மூ­லத்­தில் தெரி­வித்­த­தா­வது,
வாக­ன­மொன்­றில் மண­லுக்­குள் புதைத்து கஞ்சா கடத்­தப்­ப­டு­கின்­றது என்று இர­க­சி­யத் தக­வல் கிடைத்­தது. பொலிஸ் நிலை­யத்­து­டன் தொடர்பு கொண்டு விட­யத்­தைத் தெரி­வித்­தேன். பொலிஸ் சீரு­டை­யு­டன் ஒரு பொலிஸ் உத்­தி­யோ­கத்­தரை வரு­மாறு கூறி­னேன். பொலிஸ் சீரு­டை­யு­டன் வந்த முபா­ரக் என்ற கொன்ஸ்டபிளை அழைத்­துக் கொண்டு வல்­லி­பு­ரக் கோயில் பிரதான வீதி­யூ­டாக நாகர்­கோ­யில்­வரை சென்­றோம்.’
முபா­ரக்­கின் கையில் ரி-56ரக துப்­பாக்கி கொண்­டு­வ­ரப்­பட்­டது. அங்கு சென்ற நாம் தக­வல் தொடர்­பி­லான சில கட­மைச் செயற்­பா­டு­களை மேற்­கொண்­டோம். பின்­னர் நாகர்­கோ­யில் – குடத்­தனை பிரதான வீதி­யூ­டா­கச் சென்று வீதி­யோ­ர­மாக மோட்­டார் சைக்­கிளை நிறுத்தி நானும் முபா­ரக்­கும் மோட்­டார் சைக்­கி­ளில் இருந்து இறங்கி நின்­றோம்.
அப்­போது நீல நிறத்­தி­லான ஹன்­ரர் ஒன்று வந்­தது. அதன் முன்­பக்­கத்­தில் மூன்று பேரும், பின்­பக்­கத்­தில் நான்கு பேரும் இருந்­த­னர். வீதி­யின் மத்­திக்கு வந்து கையைக் காட்டி வாக­னத்தை நிறுத்­து­மாறு சைகை காட்­டி­னேன்.
ஹன்­ரர் என்னை இடிப்­பது போல் வந்­தது. நான் வீதி­யோ­ர­மா­கப் பாய்ந்­தேன். ஏன் நிறுத்­தா­மல் செல்­கி­றார்­கள் என்று கேட்­டுக் கொண்டு மோட்­டார் சைக்­கிளை ஸ்ராட் செய்து ஹன்­ர­ரைத் துரத்­தி­னோம்.
ஹன்­ரரை நிறுத்­து­வ­தற்கு முயன்­றோம். பின்­னுக்கு இருந்த­வர்­களை நோக்கி ஹன்­ரரை நிறுத்­து­மாறு கத்­தி­னேன். ஆனால் ஹன்­ரரை நிறுத்­த­வில்லை.
ஹன்ரருக்கு சுட உத்தரவிட்டேன். 
மோட்­டார் சைக்­கி­ளின் வேகத்­தைக் கூட்டி ஹன்­ர­ருக்கு அரு­கில் 750 மீற்­றர் அண்­மை­யா­கச் சென்று ஹன்­ரரை நிறுத்­து­மாறு கூறி­னேன். நான் நெருங்­கிய சம­யம் ஹன்­ரர் மண் பாதை ஒன்­றுக்­குள் சடு­தி­யா­கத் திரும்­பி­யது. உடனே முபா­ரக்கை நோக்கி ஹன்­ரரை நோக்கி வடி­வா­கப் பார்த்து ரயரை நோக்கி, கீழ் நோக்­கிச் சுடு­மாறு கூறி­னேன். அவர் ஒரு வெடியை ஹன்­ரரை நோக்­கிச் சுட்­டார்.
ஹன்­ரர் நிறுத்­தப்­பட்டு அதில் இருந்­த­வர்­கள் குதித்­துப் பற்­றைக்­குள் ஓடி­னர். மோட்­டார் சைக்­கிளை நிறுத்­தி­னோம். முபா­ரக் அவர்­க­ளைச் துரத்­திச் சென்­றார். நான் ஹன்­ர­ரில் திறப்பு இருக்­கின்­றதா என்று பார்ப்­ப­தற்­காக ஆச­னப் பக்­கம் சென்­றேன். அப்­போ­து­தான் ஹன்­ர­ருக்­குக் கீழ் ஒரு­வர் காயத்­து­டன் விழுந்து கிடந்­தார்.
ஹன்ரருக்குள் காயத்துடன் இருந்தவரை மீட்டோம்.
முபா­ரக்கை கூட்­பி­ட்ட நான் காயப்­பட்டு விழுந்து கிடந்த அவ­ரைத் தூக்கி எமது மோட்­டார் சைக்­கி­ளில் ஏற்றி நான் மோட்­டார் சைக்­கி­ளைச் செலுத்த அவரை எனக்­கும் முபா­ரக்­குக்­கும் இடை­யில் வைத்து அம்­பன் வைத்­திய­சா­லைக்­குக் கொண்டு சென்­றோம். அங்கு அம்­பு­லன்­ஸில் ஏற்­றி­னார்­கள். எங்­க­ளில் ஒரு­வரை வரு­மாறு கேட்­ட­னர்.
முபா­ரக்கை அம்­பு­லன்­ஸில் செல்­லு­மாறு கூறி­ய­து­டன் அவ­ரி­டம் இருந்து ரி-56 ரக துப்­பாக்­கியை நான் வாங்­கிக் கொண்­டேன். பின்­னர் பொலிஸ் நிலையத் தொலை­பேசி இலக்­கத்­து­டன் தொடர்பு கொண்டு தக­வல் வழங்­கி­னேன். அதி­காரி என்னைப் பொலிஸ் நிலை­யம் வரு­மா­றும், பொலிஸ் குழுவை அனுப்­பு­கின்­றேன் என்­று கூறி­னார். என நீதிமன்றில் வாக்கு மூலம் அளித்தார்.
 
சடலமாக மகனை பார்த்தேன். 
தாய் வாக்கு மூலம் அளிக்கையில் ,
நான் வேலை முடிந்து வீடு திரும்­பிக்­கொண்­டிருந்­தேன். அப்­பொ­ழுது வழி­யில் என்­னைக் கண்ட சிலர், எனது மகன் இறந்து விட்­டான் என்று தெரி­வித்­த­னர். அதன் பின் மருத்­து­வ­மனை சென்று உயி­ரி­ழந்த என்­னு­டைய மக­னைப் பார்த்­தேன் என வாக்குமூலம் அளித்தார்.
கோயிலுக்கு போய் வந்து சாப்பிடுறேன் என்றவனை சடலமாகவே பார்த்தேன். 
உயி­ரி­ழந்­த­வ­ரின் சகோ­தரி வாக்­கு­மூ­லம் அளிக்கையில் ,
எனது சகோ­த­ர­னி­டம் மதி­யம் 2.30 மணி­ய­ள­வில் சாப்­பி­டக் கேட்­டேன். அப்­போது எனது தம்பி காளி கோவி­லுக்­குப் போய் வந்து சாப்­பி­டு­வ­தா­கக் கூறிச் சென்றுவிட்­டார்.
அதன் பின்­னர் மாலை 4.30 மணி­ய­ள­வில் எனது சகோ­த­ரன் விபத்­தொன்­றில் இறந்து விட்­டார் என்று அய­ல­வர்­கள் மூலம் அறிந்து கொண்­டேன். நான் மருத்­து­வ­மனை சென்று பார்த்­த­போ­து­தான் எனது சகோ­த­ரன் மார்­பில் குண்டு பட்டு இறந்­ததை அறிந்து கொண்­டேன் என வாக்கு மூலம் அளித்தார்.
15ஆம் திகதி வரையில் விளக்கமறியல்.
விசா­ர­ணை­க­ளை­ய­டுத்து எதிர்­வ­ரும் 15 ஆம் திக­தி­வரை சந்தே­க நபர்­களை விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கு­மாறு நீதி­வான் நளினி சுபாஸ்­க­ரன் உத்­த­ர­விட்­டார்.
அத்துடன்,  சம்­பவதின­மன்று ஹன்­ரர் வாக­னத்­தில் பய­ணம் செய்த ஏனைய நால்­வ­ரின் விவ­ரங்க­ளை­யும் நீதி­மன்­றில் ஒப்­ப­டைக்க வேண்­டும் என்­றும் பொலி­ஸா­ருக்கு நீதி­வான் உத்­த­ர­விட்­டார். வழக்கை முன்­னிட்டு நீதி­மன்­றில் பாது­காப்­புப் பலப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது. என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More