குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்கள் சீனாவிற்கு பயணம் செய்ய உள்ளனர். இலங்கைப் பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் பதினைந்து உறுப்பினர்கள் அடுத்த வாரம் இவ்வாறு சீனாவிற்கு செல்ல உள்ளனர்.
அனர்த்த முகாமைத்துவம் தொடர்பிலான நிகழ்ச்சித் திட்டமொன்றில் பங்கேற்பதற்காக இவர்கள் இவ்வாறு இவ்வாறு சீனாவிற்கு செல்ல உள்ளனர்.
இந்த பயணம் ; இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுகளை மேலும் மேலும் வலுப்படுத்தும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
இலங்கைப் பாராளுமன்றிற்கு 2 லட்சத்து 93 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான உபகரணங்களை, சீன அரசாங்கம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love
Add Comment