விளையாட்டு

இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் பகலிரவு டெஸ்ட் போட்டிகள் நடத்த திட்டம்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் பகலிரவு டெஸ்ட் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. பிங் பந்துகளைக் கொண்டு பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதற்கு பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் இணங்கியுள்ளன.

டுபாயில் இந்தப் போட்டித் தொடர் நடைபெறவுள்ளது. பாகிஸ்தான் அணி ஏற்கனவே பகலிரவு டெஸ்ட் போட்டித் தொடரில் பங்கேற்றுள்ள போதும்  இலங்கை அணி இதற்கு முன்னதாக இவ்வாறு பகலிரவு டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் பங்கேற்றதில்லை.

இரண்டு டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஓருநாள் போட்டிகள், மூன்று டுவன்ரி20 போட்டிகள் உள்ளிட்ட போட்டித் தொடர் தொடர்பில் இரு நாடுகளினதும் கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபைகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

போட்டித் தொடருக்கான திகதிகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply