ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையை இந்திய கிரிக்கெட் வாரியம் நீக்க வேண்டும் என்று கேரள உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
ஸ்ரீசாந்த் ஐ.பி.எல். தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக விளையாடிய போது கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்து அவர் மீது இந்திய கிரிக்கெட் வாரியம் தடை விதித்தது.
இதனைத் தொடர்ந்து தடைக்கெதிராக இவர் வழக்கு தொடர்ந்ததனையடுத்து டெல்லி நீதிமன்றம் தடையை நீக்கியது. எனினும் இந்திய கிரிக்கெட் வாரியம் அவர் மீதான தடையை நீக்கவில்லை.
இந்தநிலையில் தடையானது அரசியலமைப்பு உரிமையை மீறும் செயலாகும் எனவும் தடையை நீக்க வேண்டும் எனவும் அவர் கேரள உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
குறித்த வழக்கின் விசாரணைகள் முடிவடைந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட நிலையில் குறித்த தடையை நீக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Spread the love
Add Comment