குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
உலக சம்பியன்ஷிப் மெய்வல்லுனர் போட்டித் தொடரின் 100 மீற்றர் மகளிருக்கான போட்டியில் அமெரிக்காவின் டோரி போவீ ( Tori Bowie ) வெற்றியீட்டியுள்ளார். அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி, டோரி தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் எதிர்வு கூறல்களை பிழைக்க வைத்து, ஹூசெய்ன் போல்ட்டை தோற்கடித்து ஜஸ்டின் காட்லீன் தங்கப் பதக்கம் வென்றார்.
இதே விதமாக 100 மீற்றர் மகளிருக்கான போட்டியில் ஜமய்க்காவின் எலைன் தொம்சன் ( Elaine Thompson ) அல்லது ஐவரி கோஸ்ட்டின் மேரி-ஜோசே ரா லூ( Marie-Josee Ta Lou ) வெற்றியீட்டுவார் என எதிர்வு கூறப்பட்டிருந்தது.
எனினும் இந்த இரண்டு வீராங்கனைகளையும் பின்தள்ளி அமெரிக்க நட்சத்திர வீராங்கனை டோரி போவீ வெற்றியீட்டியுள்ளார்.
Add Comment