உலகம்

2020ம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் திட்டமில்லை – மைக் பென்ஸ்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

எதிர்வரும் 2020ம் ஆண்டில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் திட்டமில்லை என தணை ஜனாதிபதி மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார். தமக்கு எதிராக போலிப் பிரச்சாரம் செய்யப்பட்டு வருவதாக அவர்  குற்றம் சுமத்தியுள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப் இரண்டாம் தவணைக்காக போட்டியிட மாட்டார் எனவும், எனவே மைக் பென்ஸை தேர்தலில் போட்டியிடச் செய்ய குடியரசு கட்சியின் சிலர் முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது எனவும், நிர்வாகத்தில் பிளவினை ஏற்படுத்த இவ்வாறான செய்திகள் வெளியிடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறான பொய்யான செய்திகள் வெளியிடப்பட்டாலும் அனைத்து தரப்பினரும் ஓர் குழுவாக இணைந்து நாட்டுக்கு சேவையாற்றுவதில் முனைப்பு காட்டுவதாக  மைக் பென்ஸ்  தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply