குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
விவசாய அமைச்சின் தளபாடங்களுக்கு ஆறு மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக ஜே.வி.பி கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. விவசாய அமைச்சின் கட்டிடத்திற்கு தளபாடங்களை கொள்வனவு செய்வதற்காக இவ்வாறு செலவிடப்படுவதாகத் தெரிவித்துள்ளது.
பாராளுமன்றில் இன்றைய தினம் குறைநிரப்புப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்ட போது இந்த விடயம் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்நாயக்க இது குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.
Spread the love
Add Comment