குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மன்செஸ்டர் விமானநிலையத்தின் விமானமொன்றிற்குள் வெடிகுண்டினை கொண்டு செல்ல திட்டமிட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட நபர் தொடர்பில் இடம்பெற்ற நீதிமன்ற விசாரணைகளின் இறுதியில் குறிப்பிட்ட நபர் குற்றவாளி என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நதீம் முகமட் என்பவரை குற்றவாளி என தெரிவித்துள்ள நீதிமன்றம் 23 ம் திகதி அவரிற்கான தண்டனையை அறிவிக்கவுள்ளது
குறிப்பிட்ட நபர் ஜனவரி 30 திகதி விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டவேளை அவரிடம் வெடிகுண்டு காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.இத்தாலிக்கு செல்லவிருந்த விமானத்தில் குண்டை வெடிக்கவைப்பதே அவரது நோக்கம் எனவும் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். நதீம் முகமட் பாக்கிஸ்தானில் பிறந்தவர் என்பதுடன் இத்தாலிய கடவுச்சீட்டை கொண்டிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நதீம் விமானத்திற்குள் ஏற முயன்றவேளை கைதுசெய்யப்பட்டார், வேறு எவரோ தனது பிரயாணப்பொதியில் குண்டுகளை வைத்ததாக அவர் தெரிவித்திருந்தார்.
Add Comment