விளையாட்டு

உலகக் கிண்ண மகளிர் ரக்பி போட்டித் தொடருக்கான வேல்ஸ் அணி அறிவிப்பு


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

உலகக் கிண்ண மகளிர் ரக்பி போட்டித் தொடருக்கான வேல்ஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வேல்ஸ் அணியின் கரிஸ் பிலிப்ஸ் ( Carys Phillips ) அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

எனினும் அணியின் நட்சத்திர வீராங்கனை றெபேக்கா டி பிலிப்போ ( Rebecca De Filippo   ) உபாதை காரணமாக இந்தப் போட்டித் தொடரில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போட்டித் தொடரில் சிறந்த பெறுதியை பெற்றுக்கொள்ள முயற்சிக்கப்படும் எனவும், உலக அளவில் வேல்ஸ் பெருமிதம் கொள்ளும் வகையில் அணி விளையாடும் எனவும் அணியின்  பயிற்றுவிப்பாளர்  றோலாண்ட்  பிலிப்ஸ்  ( Rowland Phillips )  தெரிவித்துள்ளார்.

முதல் போட்டியில் வேல்ஸ் அணி பலம்பொருந்திய நியூசிலாந்து அணியை எதிர்த்தாட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.