இலங்கை

அனைவருக்கும் சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்து எனது சுதந்திரத்தை இழந்துவிட்டேன் – மஹிந்த ராஜபக்ஸ


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அனைவருக்கும் சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்து தமது சுதந்திரத்தை இழந்து விட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

மூன்று தசாப்தங்களாக நீடித்து வந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததன் மூலம் தாம் நாட்டின் அனைவருக்கும் சுதந்திரம் பெற்றுக் கொடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.

எனினும் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த காரணத்தினால் தம்மால் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டதாகவும் தமது சுதந்திரம் பாதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச சமூகம் தமக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்த காத்திருப்பதாக அவர்  தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியா, பிரித்தானியா போன்ற நாடுகளுக்கு தாம் சென்றிருந்த போது தம்மை கைது செய்யுமாறு போராட்டங்கள் நடத்தப்பட்டதாகவும் மகிந்த  தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 7 other subscribers