குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்த ஹாவா குழு முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுதந்தர தெரிவித்துள்ளார்.
இந்தக் குழுவின் தலைவர் உள்ளிட்ட 12 உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் இந்தக் குழுவுடன் தொடர்புடைய இரண்டு முக்கிய உறுப்பினர்கள் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
கைது செய்பய்பட்டவர்களில் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி போராளிகள் சிலர் உள்ளடங்குவதாகவும் இந்தக் குழுவினர் தமிழ் புலம்பெயர் சமூகத்துடன் பேணி வரும் உறவுகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும் மா அதிபர் பூஜித் ஜயசுதந்தர தெரிவித்துள்ளார்.
Spread the love
Add Comment