இந்தியா பிரதான செய்திகள்

குஜராத் மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் அகமது பட்டேல் வெற்றி:-

குஜராத் மாநிலங்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நள்ளிரவு வரை நீடித்த நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் அகமது பட்டேல் வெற்றி பெற்றுள்ளார்.

குஜராத் மாநிலத்தில் 3 இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தல் நேற்று நடைபெற்றது. ஏற்கனவே பதவி விலகிய பா.ஜனதாவில் இணைந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் 6 பேர் பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இந்தநிலையில் காங்கிரஸ் வேட்பாளர் அகமது பட்டேல் தனக்கு தேவையான 44 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதேபோல், பா.ஜ.க. தலைவர் அமித்ஷா மற்றும் ஸ்மிரிதி ரானி ஆகிய இருவரும் வெற்றி பெற்றுள்ளனர்.

அகமது பட்டேலின் வெற்றி கட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என கட்சியின் சிரேஸ்ட தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.