நீர்கொழும்பின் குரான என்னும் பிரதேசத்தில் விசேட அதிரடிப் படையினரின் வாகனம் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வான் ஒன்றில் வந்த குழுவொன்றினால் இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த சம்பவத்தின் போது அதிரடிப் படையினர் எவரும் காயமடையவில்லை எனவும் துப்பாக்கிப்பிரயோகம் நடத்தியவர்களில் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Add Comment