இலங்கை பிரதான செய்திகள்

சுதந்திரக் கட்சியுடனான உறவுகளை ஐ.தே.க துண்டித்துக் கொள்ளக்கூடிய சாத்தியம்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனான உறவுகளை ஐக்கிய தேசியக் கட்சி துண்டித்துக் கொள்ளக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ம் திகதிக்கு பின்னர் தனித்து ஆட்சி அமைப்பது குறித்து ஐக்கிய தேசிய கட்சி கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாடுகள் குறித்து ஐக்கிய தேசியக் கட்சி கடும் அதிருப்தி கொண்டுள்ளதாகவும், சுதந்திரக் கட்சியின் நடவடிக்கைகள் கூட்டு எதிர்க்கட்சியை தூண்டும் வகையில் அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் அரசியல் சூழ்நிலை குறித்து ஜனாதிபதியும் பிரதமரும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.  கூட்டாக இணைந்து ஆட்சி செய்யும் நிலையில் சில சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்களை நேரடியாக பகிரங்கமாக குற்றம் சுமத்தி வருவதாகக் குறிப்பிடப்படுகின்றது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.