இந்தியா

சென்னை விமான நிலையத்தில் 54 லட்சம் ரூபா பெறுமதியுள்ள தங்க கட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன


சென்னை விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட 54 லட்சம்  ரூபா பெறுமதியுள்ள   தங்க கட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன்   கடத்தலை மேற்கொண்ட நபரும்  கடத்தலுக்கு உதவிய விமான நிலைய ஊழியரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சியை சேர்ந்த 51 வயதான  பக்ரூதீன்  என்பர் சுற்றுலா விசாவில் சென்றுவிட்டு திரும்பி வந்த போது  அவர் மீது சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள் அவரது உடமைகளை சோதனை செய்த போது மேற்படி தங்க கட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பில் சுங்க இலாகா அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply