ஏறாவூர் ஹிதாயத் நகரில் குடிநீரைப் பெற்றுக் கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டு வந்த 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டினால் குடிநீர் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
மக்களின் குறையறியும் நோக்கில் ஹிதாயத் நகருக்கு சென்றிருந்த போது குடிநீர்ப்பிரச்சினைகள் தொடர்பில் குறித்த பிரதேச மக்கள் கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் முறையிட்டிருந்தமைக்கமைவாக ஜமிய்யதுல் ஹஸனாத் சமூக சேவை அமைப்புடன் இணைந்து மக்களுக்கான குடிநீர் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Add Comment