குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் எவரும் கையொப்பமிடவில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
நீதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களினால் இவ்வாறு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இந்த நம்பிக்கையில்லா தீர்மான யோசனையில் இதுவரையில் எவரும் கையொப்பமிடவில்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
Spread the love
Add Comment