இந்தியா பிரதான செய்திகள்

இந்தியாவில் தொடரும் பலத்த மழையால் பீகார், அசாம், மேற்கு வங்கத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது:-


பீகார், அசாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. பீகார் மாநிலத்தின் சீமாஞ்சலில் 24 மணி நேரம் கனமழை பெய்துள்ளது. மேலும் கிவுன்கஞ்ச், பூர்ணியா அராரியா ஆகிய மாவட்டங்களிலும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. அங்குள்ள மகாநந்தா, கங்காய் நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது.

இதனால் பல கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. இதையடுத்து மீட்பு பணிக்காக மத்திய பாதுகாப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார்கள். வெள்ளத்தில் சிக்கிய மக்களை படகுகளில் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர் என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளதால் மக்கள் அவஸ்த்ததைகளுக்கு உள்ளாகியுள்ளனர்.. வெள்ள மீட்பு பணி குறித்து முதல் அமைச்சர் நிதிஷ் குமாருடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் தொலைபேசியில் ஆலோசனை நடத்தியுள்ளார்.

அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்கிறது. இதனால் பிரம்மபுத்திரா உள்பட 11 நதிகளில் வெள்ள அபாயம் ஏற்படும் அளவு தண்ணீர் ஓடுகிறது. அங்கு 21 மாவட்டங்களில் 22 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். திப்ரு மாவட்டம் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. அங்கு பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. மழைக்கு 15 பேர் உயிரிழந்தனர். ரெயில் சேவை பல இடங்களில் துண்டிக்கப்பட்டு இருக்கிறது.

மேற்கு வங்காளத்திலும் கன மழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. கன மழையால் பீகார், அசாம், மேற்கு வங்காளத்தில் லட்சக்கணக்கான மக்கள் பரிதவித்து வருகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.