விளையாட்டு

ரொனால்டோவிற்கு எதிராக போட்டித் தடை


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ரியல் மட்ரீட் கழகத்தின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐந்து போட்டிகளில் ரொனால்டோ பங்கேற்பதற்கு இவ்வாறு  தடை விதிக்கப்பட்டுள்ளது. நடுவரை தள்ளியதாக ரொனால்டோ மீது குற்றம் சுமத்தி இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுப்பர் கப் பெஸ்ட் லீக் போட்டித் தொடரில் பார்சிலோனா கழகத்திற்கு எதிரான போட்டியில் இவ்வாறு ரொனால்டோ நடுவரை தள்ளியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் போட்டியில் ரியல் மட்ரீட் கழகம் 3க்கு ஒன்று என்ற கோல் கணக்கில் பார்சிலோனவை வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறெனினும் ரொனால்டோ சம்பியன்ஸ் லீக் போட்டித் தொடரில் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply