உலகம்

மாலியில் ஐ.நா. அமைதிப்படை தலைமையகம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர்

மாலியில் ஐ.நா அமைதிப்படை தலைமையகம் மீது தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள்  சபை தெரிவித்துள்ளது.

ஆபிரிக்க நாடுகளில் செயல்படும் தீவிரவாத இயக்கங்களை அழிக்கும் முகமாக மாலியில் ஐ.நா சபையின் கீழ் செயல்படும் இந்த அமைதிப்படை முகாம்கள்; செயற்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில், நேற்றையதினம் அந்நாட்டின் வடபகுதி நகரமான    டிம்பக்து-வில் உள்ள  அமைதிப்படை தலைமையகத்தில் இனந்தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும் இந்த தாக்குதலில் 5 மாலி நாட்டைச் சேர்ந்த வீரர்கள் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும்  அமைதிப்படையை சேர்ந்த   10-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதனையும்  உறுதி செய்துள்ள ஐ.நா சபை, நடத்தப்பட்டது தீவிரவாத தாக்குதல்தான் எனத் தெரிவித்துள்ளது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.