நாட்டுக்கு பாதகமற்ற வெளிநாட்டு வர்த்தக நடவடிக்கைகளில் தவறில்லை என முன்னாள் சபாநாயகர் சமால் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அவ்வாறான வெளிநாட்டு வர்த்தக நடவடிக்கைகளை தாம் எதிர்க்கவோ அல்லது தடுக்கவோ இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் சீனாவுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கை நாட்டுக்கு பாதகமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சூரியவௌ பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Add Comment