இலங்கை

2020ம் ஆண்டு வரையில் இந்த அரசாங்கம் ஆட்சி நடத்தும் – பீ.ஹரிசன்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
2020ம் ஆண்டு வரையில் இந்த அரசாங்கம் ஆட்சி நடத்தும் என கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பீ.ஹரிசன் தெரிவித்துள்ளார்.

ஆட்சி மாற்றம் பற்றி தற்போது பேசப்பட்டு வருவதாகவும் அவ்வாறான ஓர் நிலைமை ஏற்படக்கூடிய சாத்தியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 2020ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் வரையில் இந்த அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

பாரியளவில் போராட்டங்களை நடத்துவதன் மூலம் அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரண்டு பிரதான கட்சிகள் கூட்டாக இணைந்து ஆட்சி நடத்தும் போது முரண்பாடுகள் ஏற்படுவது வழமையானதே என அவர் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.