உலகம் பிரதான செய்திகள்

ஒபாமா ருவிற்றரில் வெளியிட்ட கருத்து புதிய சாதனை

அமெரிக்காவின  விர்ஜினியா மாநிலத்தில் இருதரப்பினர் நடத்திய பேரணியில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா ருவிற்றரில் வெளியிட்ட கருத்து புதிய சாதனை படைத்துள்ளது.

அமெரிக்காவில் 1861-ம் ஆண்டு நடைபெற்ற சிவில் யுத்தத்தின் போது விர்ஜினியா மாநிலத்தில் அடிமைகள் சார்பு இயக்கத்தினை   வழிநடத்திச் சென்ற ரொபேர்ட்  இ லீ என்பவரது  சிலை அகற்றப்பட  உள்ளமையை கண்டித்து கடந்த ஓகஸ்ட் 12ம் திகதி   ஆயிரக்கணக்கான தீவிர வலதுசாரி வெள்ளை இனத்தவர்கள்   பேரணி நடத்தினர்.

இவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு பிரிவினரும் பேரணி நடத்தியதனால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல்  ஏற்பட்டு அது கலவரமாக மாறிய சூழ்நிலையில்   3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 13க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்தனர்.

குறித்த சம்பவத்துக்கு இருதரப்பினருமே காரணம் என தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில்   ஒபாமா  குறித்த கலவரம் தொடர்பாக அதிருப்தி தெரிவித்து கடந்த சனிக்கிழமை ருவிற்றரில் தனது கருத்தை பதிவு செய்திருந்தார்.

அதில் ஒபாமா  மற்றவரின் நிறம், பின்னணி, மதம் ஆகியவற்றின் அடிப்படையில் அவரை வெறுப்பதற்காக யாருமே பிறக்கவில்லை என  குறிப்பிட்டிருந்தார்.

பல்வேறு இனம், நிறம், மதங்களை சேர்ந்த பிள்ளைகள் ஒன்றுகூடி விளையாடுவதை ஜன்னல் வழியாக ஒபாமா பார்த்து ரசிப்பது போன்ற புகைப்படத்துடன் வெளியான இந்த ருவீற் சில மணி நேரங்களில் வைரலாக மாறியயதுடன்  12 லட்சம் பேர் அவரது கருத்தை மீள்ருவிற் செய்திருந்தனர்.

ருவிற்றர் வரலாற்றில் மிகவும் விரும்பப்பட்ட ஐந்தாவது ருவீற்றாக ஒபாமாவின் கருத்து புதிய சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.