குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நல்லூரில் உள்ள தியாகி திலீபனின் நினைவிடத்தை புனரமைத்து வடமாகாண சபை அதனை பராமரிக்க முடிவு செய்துள்ளதாக அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபை விசேட அமர்வு இன்று நடைபெற்ற போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
திலீபனின் நினைவிடத்தை சூழவுள்ள பகுதிகளை அறிக்கையிட்டு யாழ்.மாநகர சபையிடம் இருந்து குறித்த பகுதியை மாகாண சபை பொறுப்பேற்றுக்கொள்ளும் முகமாக முதல் கட்டமாக ஆணையாளருக்கு கடிதம் மூலம் கோரப்பட்ட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை முதலமைச்சர் முன்னெடுக்க வேண்டும்.
இடத்தினை பொறுப்பேற்ற பின்னர் மாகாணசபையினால் நினைவிடம் புனரமைக்கப்பட்டு அதனை மாகாண சபை பராமரிக்கும்.
இதனை திலீபனின் நினைவு வாரத்திற்கு முன்பாக முன்னெடுக்கும் முகமாக விரைந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மேலும் தெரிவித்தார்
Spread the love
Add Comment