குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜெனிவாலிருந்து வருகைதந்துள்ள ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் பிரதிநிதியான தோமஸ் மற்றும் இலங்கை யுஎன்எச்சி ஆர் பிரதிநிதி ஆகியோர் கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனா்.
இன்று வியாழக்கிழமை பிற்பகல் 179 நாளாக கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்களை சந்தித்த இவா்கள் அவா்களுடன் கலந்துரையாடியுள்ளனா்.
காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்களின் நிலைமைகளை கேட்டறிந்து கொண்டதோடு, கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளனா்.
அதேவேளை சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க அவர்கள் மறுத்துவிட்டனா்.
Spread the love
Add Comment