இலங்கை பிரதான செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடமையாற்றும் புலனாய்வுப்பிரிவு உத்தியோகத்தர் தங்கம் கடத்தி கைது


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கடமையாற்றி வரும் அரச புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர் ஒருவர் தங்கம் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளினால் கைது செய்யப்பட்ட குறித்த புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்திடம் மீட்கப்பட்ட தங்கத்தின் பெறுமதி சுமார் இரண்டு கிலோ கிராம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சிங்கப்பூரிலிருந்து வந்த நபர் ஒருவர் தமக்கு இந்த தங்கத்தை வழங்கியதாகவும் அதனை விமான நிலையத்திற்கு வெளியே எடுத்து வந்து தருமாறு கோரியதாகவும் கைது செய்யப்பட்ட புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.

எனினும் தங்கத்தை வழங்கியவர் தலைமறைவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த தங்கத்தின் மொத்தப் பெறுமதி 91 லட்சம் ரூபா எனத் தெரிவிக்கப்படுகிறது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.