குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நன்கொடையாளர் சாளினி விக்கிரமசிங்க அவர்களின் நிதி ஏற்பாட்டில் மல்லாவி மத்திய கல்லூரியில் கல்வி பயின்று 2016 ஆம் ஆண்டு மருத்துவபீடம், பொறியியல் மற்றும் வணிகத்துறை மாணவர்கள் ஒன்பது பேருக்கு மடிக்கணிணிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இன்று வெள்ளிக்கிழமை 18.08.2017 முற்பகல் 8.00 மணிக்கு கல்லூரி முதல்வர் து.யேசுதானந்தர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி ஸ்ரீஸ்காந்தராசா அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்
அத்துடன் இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் மற்றும் வலயக்கல்வி ஆரம்ப நிலை உதவி கல்விப் பணிப்பாளர் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் மாணவர்கள் என்போரும் கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட மாணவா்களுக்கு கணிணிகளை வழங்கி வைத்துள்ளனா்.
Add Comment