இலங்கை பிரதான செய்திகள்

பிரதமர் பதவியில் மாற்றம் செய்யப்படாது – துமிந்த திஸாநாயக்க


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பிரதமர் பதவியில் மாற்றம் செய்யப்படாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் பிரதமர் பதவியில் எவ்வித மாற்றங்களையும் செய்ய உத்தேசிக்கப்படவில்லை என  சுட்டிக்காட்டியுள்ள அவர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள இணக்கப்பாட்டுக் காலத்திற்கு முன்னதாக பிரதமர் பதவியில் மாற்றம் செய்யப்படாது என  குறிப்பிட்டுள்ளார்.

இணக்கப்பாடு குறித்த காலம் பூர்த்தியானதன் பின்னர், பிரதமர் பதவி குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கண்டி கன்னொருவ பிரதேசத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது துமிந்த திஸாநாயக்க  இதனைத் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.