இலங்கை பிரதான செய்திகள்

தனித்து அரசாங்கம் அமைப்பது குறித்து ஐ.தே.க கவனம்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தனித்து அரசாங்கமொன்றை அமைப்பது குறித்து ஐக்கிய தேசியக் கட்சி கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து கூட்டு அரசாங்கம் ஒன்றை முன்னெடுப்பதனை விடவும், ஐக்கிய தேசிய முன்னணி தனித்து ஆட்சி அமைப்பது குறித்து கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிரதமரிடம் இந்த யோசனையை முன்வைத்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணிக்கே மக்கள் ஆணை கிடைக்கப் பெற்றது என சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சி அமைத்தால் அதன் ஊடாக சிறந்த ஆட்சியை முன்னெடுக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.