குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரபல கால்பந்தாட்ட வீரர் நெய்மருக்கு எதிராக அவர் முன்னதாக பிரதிநிதித்துவம் செய்த பார்சிலோனா கழகம் வழக்குத் தொடர்ந்துள்ளது. நெய்மர் தற்போது பாரிஸின் செட் ஜெர்மயின் கழகத்தின் சார்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பரிமாற்று அடிப்படையில் சாதனை தொகையில் நெய்மர் பார்சிலோனா கழகத்திலிருந்து, ஜெர்மயின் கழகத்திற்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பிரேஸில் தேசிய கால்பந்தாட்ட அணியை பிரதிநிதித்துவம் செய்யும் நெய்மர், 222 யூரோ பெறுமதியான பரிமாற்று அடிப்படையில் ஜெர்மயின் கழகத்தின் சார்பில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளார். தமக்கு எதிரான வழக்கினை எதிர்நோக்கத் தயார் எனவும் பார்சிலோனா கழகமும் தமக்கு சில கொடுப்பனவுகளை செய்ய வேண்டியுள்ளதாகவும் நெய்மர் தெரிவித்துள்ளார்.
Add Comment