உலகம் பிரதான செய்திகள்

ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 7காவல்துறை உத்தியோகத்தர்கள் உட்பட 40க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 7 காவல்துறை உத்தியோகத்தர்கள் உட்பட  40க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். சம்பளத்தை பெற்றுக்கொள்ள சென்றிருந்த காவல்துறை உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தற்கொலை குண்டுதாரி ஒருவரே இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்க்பபடுகிறது.  ஆப்கானிஸ்தானின் தென் மாகாணமான ஹெல்மான்ட்டின் தலைநகரான லஸ்கர் கா (Lashkar Gah ) ல் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு தலிபான் இயக்கம் உரிமை கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.