குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பௌத்த சாசன அமைச்சு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ் கொண்டு வரப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பௌத்த சாசன அமைச்சின் அதிகாரிகளை ஜனாதிபதி வழிநடத்த வேண்டுமென மூன்று பீடங்களினதும் மாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட பௌத்த தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கண்டி அஸ்கிரி பீடத்தின் சிரேஸ்ட மாநாயக்க தேரர்களில் ஒருவரான மெதகம தம்மானந்த தேரர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். இலங்கையில் 75 வீதமானவர்கள் பௌத்தர்கள் எனவும் பௌத்த மதத்தை பாதுகாப்பது சுலபமான காரியமல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ பௌத்த மதத்தை பாதுகாக்கும் பணிகளை சிறந்த முறையில் மேற்கொண்டிருந்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Add Comment