இந்தியா

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கு செப்டம்பர் 20ம் திகதிக்கு ஒத்திவைப்பு


2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கில் இன்று அறிவிக்கப்பட இருந்த தீர்ப்பு  செப்டம்பர்  20ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை முறைகேட்டில் முறைகேடு நடந்ததால் 1 லட்சத்து 76 ஆயிரம்  கோடி  ரூபா இழப்பீடு அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது என கணக்கு தணிக்கை குழு அறிக்கை குற்றம் சுமத்தியிருந்தது.

இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்  கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.  இந்த வழக்கின் விசாரணை கடந்த 6 ஆண்டுகாலமாக டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி முன்னிலையில் நடைபெற்று வந்தது.

இவ்வழக்கில் ஏப்ரல் மாதம் இறுதி விசாரணை முடிவடைந்து தீர்ப்பு   திகதி  இன்று அறிவிக்கப்படும் என நீதிபதி ஓபி ஷைனி தெரிவித்திருந்தார்.  இந்நிலையில் வழக்கில் தீர்ப்பு தயாராகவில்லை எனவும்  ஆகையால்  வழக்கினை ஒத்தலைப்பதாகவும் நீதிபதி அறிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply