இலங்கை பிரதான செய்திகள்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினத்தன்று வடக்கில் போராட்டங்களுக்கு சிவாஜி அழைப்பு

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

காணாமல் ஆக்கப்பட்டவர்ககளின் உறவினர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக எதிர்வரும் 30ஆம் திகதி வடமாகாணம் தழுவிய போராட்டத்தினை முன்னெடுக்க உள்ளதாக வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,

எதிர்வரும் 30ஆம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கபப்ட்டவர்கள் தினம். அன்றைய தினத்தில் வடக்கில் காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முன்னெடுத்து வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணம் , முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டத்தில் போராட்டங்களை முன்னெடுக்க உள்ளோம்.

போர் கால பகுதியில் பல்லாயிரக்கணக்கானவர்கள் காணாமல் ஆக்கப்பட்டு உள்ளானர். தமிழ் மக்களில் நூற்றுக்கு ஒருவர் அவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டு உள்ளனர். இறுதி போரின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்தும் , இராணுவத்தினரால் கடத்தப்பட்டும் பலர் காணாமல் ஆக்கப்பட்டு உள்ளனர். அதில் பலர் குடும்பமாக இராணுவத்தினரிடம் சரணடைந்து காணமல் ஆக்கப்பட்டு உள்ளனர்.

காணமல் ஆக்கப்பட்டவர்களை வெளிப்படுத்த கோரி உறவினர்கள் வடக்கில் 150 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து 30ஆம் திகதி காலை யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக பாரிய போராட்டத்தினை முன்னெடுக்க உள்ளோம்.

பின்னர் அன்றைய தினம் மதியம் முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தினை நோக்கி பேரணியாக சென்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக போராட்டம் நடத்த வுள்ளோம். அதேவேளை வவுனியாவிலும் போராட்டத்தினை முன்னெடுக்க உள்ளோம்.

அன்றைய தினம் போராட்டம் பாரிய மக்கள் பங்களிப்பு கொண்ட போராட்டமாக மாற வேண்டும். அதற்காக கட்சி பேதங்களை கடந்து அனைவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்.

அதேவேளை தாய் தமிழக உறவுகளும் அன்றைய தினம் தமிழகத்தில் போராட்டங்களை முன்னெடுத்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு  வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap