குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஒலிம்பிக் போட்டித் தொடரின் சைக்கிளோட்டப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற ஜக் பொப்றிட்ஜ் ( Jack Bobridge) போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 28 வயதான ஜக் பொப்றிட்ஜ் இரண்டு தடவைகள் அவுஸ்திரேலியாவின் சார்பில் ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.
இவரை பேர்த் நகரில் வைத்து கைது செய்துள்ள அவுஸ்திரேலிய காவல்துறையினரால் இவருக்கெதிராக ஐந்து குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளது. போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டமை, விநியோகம் செய்தமை உள்ளிட்ட ஐந்து குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட ஜக் பொப்றிட்ஜை காவல்துறையினர் பிணையில் விடுவித்துள்ளனர், எனினும் அடுத்த மாதம் அவருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது
Add Comment