இலங்கை

ராஜிதவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டும் – மஹிந்த


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்னவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கூட்டு எதிர்க்கட்சியினால் ராஜிதவிற்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் சரியானதே என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தற்பொது நிலவி வரும் சூழ்நிலைகளை கருத்திற் கொண்டு கூட்டு எதிர்க்கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உள்ளதாகத் தெரிவித்துள்ளார். நம்பிக்கையில்லா தீர்மானத்தில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை மக்கள் தெரிந்து கொண்டால், ராஜிதவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்வார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply