ஹெரொயின் போதைப் பொருளை வைத்திருந்த ஒருவர் தெஹிவளை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 16 கிராம் 110 மில்லிகிராம் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் களுபோவில பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதான நபர் எனவும் இன்றையதினம் அவர் இன்று கல்கிசை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை 2 கிராம் 500 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த 35 வயதபன ஒருவர் திவுலப்பிட்டிய வலவ்வத்த பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Add Comment