Home இலக்கியம் தந்தையின் நினைவுகளையும், கனவுகளையும், சுமந்து வாழும் கவிஞர் நாகேந்திரன் செந்தூரனுடன் ஒரு சந்திப்பு !

தந்தையின் நினைவுகளையும், கனவுகளையும், சுமந்து வாழும் கவிஞர் நாகேந்திரன் செந்தூரனுடன் ஒரு சந்திப்பு !

by admin

ஈழத்துக் இளம்கவிஞரும் எழுத்தாளரும் ஈழத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் பிறந்து வன்னி மண்ணில் வளர்ந்தவரும், இடபெயர்வின் பின் மன்னார் மாவட்டத்தில் வாழ்ந்தவரும் ஈழத்தின் நான்காம்கட்டத்தில் இடம்பெற்ற போர், போர்க்கால மக்களின் உண்மைக் கதைகள் ஈழத்தின் நிலவரங்கள் போன்றவற்றைக் கவிதை கட்டுரைகளின்வாயிலாக தொடர்ச்சியாக பல்வேறு ஊடகங்களில் எழுதி வருகின்ற இவர் இளம் வயதிலேயே பரவலாக அறியப்பட்டவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞன பீடத்தில் முகாமைத்துவம் சார்ந்த கற்கைநெறியினை இறுதியாண்டு மாணவரும் “யாதுமாகி” கவிதை நூல் ஆசிரியருமான நாகேந்திரன் செந்தூரன் ஒருநேர்காணல்.

நிலவன் :- உங்கள் குடும்பம் பற்றியும் வாழ்வுச்சூழல் பற்றியும் சொல்ல முடியுமா..?

செந்தூரன் :- சொந்த இடம் கிளிநொச்சி. தோடர் இடப்பெயர்வுகள் காரணமாக 2000 ஆண்டில் மன்னார் மாவட்டத்தின் பெரிய மடு என்ற கிராமத்தில் குடியமர்ந்து இன்றுவரை அங்கேயே நிலைப்பட்டிருக்கிறேம்.

எனது தந்தை விடுதலைப் போராட்டத்தில் மாவீரரானார். நானும் இரண்டு சகோதரிகளும் அம்மாவும் தந்தையின் நினைவுகளையும் கனவுகளையும் சுமந்து வாழ்ந்து வருகிறோம். உள, சமுக, பொருளாதாரப் பிரச்சனைகள் என்று எல்லா வகையான நெருக்கடிகளையும் எனது குடும்பம் சந்தித்திருக்கிறது என்றே கூறவேண்டும்.

நிலவன் :- உங்களின் பற்றிக் கூறுவீர்களா..?

செந்தூரன் :-  நான் நாகேந்திரன் செந்தூரன். சாதாரண தரம் மன்/பெரியமடு மகாவித்தியாலயத்திலும் உயர்தரக் கல்வியை மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லுரியிலும் கற்று தற்போது பேராதனைப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞன பீடத்தில் முகாமைத்துவம் சார்ந்த கற்கைநெறியினை இறுதியாண்டு மாணவனாக இருக்கிறேன்.

நிலவன் :- உங்கள் பல்துறை பற்றிச் சொல்லுங்கள்..?

செந்தூரன் :-  பல்துறைகளில் என்று சொல்வதை விட ஒரு சில துறைகளில் ஈடுபாடு அல்லது ஆர்வம் இருந்தாலும் அடுத்த கட்டங்களை நோக்கி நகர்ந்து என்னை அடையாளப் படுத்திக்கொள்ளக் கூடிய அளவில் என்னிடம் தனித்துவம் இருக்கவில்லை. அல்ல, நான் வாய்ப்புக்களை பயன் படுத்திக் கொள்ளவில்லை என்றே கூறவேண்டும். என்னுடைய கவிதைகள் மூலம் தனித்துவத்தை பெறும் முயச்சியில் சதா ஈடுபடுகிறேன். கவிதை முறையினை கடர்ந்து மரபுக்கவிதைக்குரிய ஒரு சில இயல்புகளையும் புதுக்கவிதைக்குரிய ஒருசில இயல்புகளையும் கொண்டு கவிதைகளை புனைகிறேன்.

கவிதைத் துறையினைப் பொறுத்த அளவில் இற்றை வரையான நிலமைக்கு எனது கவிதைகளை விரும்புகின்ற உறவுகளின் பாராட்டுக்கள், பெரிய மனிதர்களின் தூண்டுதல்கள் என கவிதைகள் ஒலிவடிவில் பெற்றுக்கொண்டுள்ள தனித்துவம் போன்ற விடையங்களை செல்வாக்கு செலுத்தியிருக்கிறன.

நிலவன் :- ஒரு எழுத்தாளன் பிறக்கிறனா..? உருவாக்கபடுகின்றானா..?

செந்தூரன் :-  கவிதை, சிறுகதை, விமர்சனம், போன்ற பல்வேறு துறைகளில் எழுத்தாளர்களை வகைப்படுத்த முடியும். சூழல் காரணிகள், பயிற்சி மூலமான அனுபவம், துறைசார்ந்த அறிவை மேன்படுத்ததுவதற்குகான கற்றல், பின்னணி போன்ற விடையங்கள் மூலம் எழுத்தாளன் ஒருவன் உருவாக்கப்படலாம். எனினும் இயல்பான தன்மை ஒன்று இல்லாதவிடத்து உருவாக்கப்பட்ட எழுத்தாளனின் தரம், தனித்துவம். சிறப்பாக இருக்கும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை.

ஏனைய எழுத்தாளர்களில் இருந்து ஒரு கவிஞன் முற்றிலும் வேறுபடுகின்றான் கவிதை தனிமனித சிந்தனை சக்தியோடும் கற்பனை வளத்தோடும் நேரடியான தொடர்பைக் கொண்டிருக்கிறது எனவே சூழல் காராணிகள் பயிற்சி துறைசார்ந்த அறிவு பின்னணி போன்றவற்றால் கவிஞர்களை அவ்வாறு உருவாக்க முடியாது.

கற்பனையினை யாரும் கற்பிக்கவோ கடடுப்படுத்தவோ முடியாது. கவிஞர்கள் காலத்திற்குக் காலம் பிறக்கிறார்கள். நிர்ப்பந்தத்தின் பின்னணியில் கவிஞர்கள் அவசர அவசரமாக தற்காலத்தில் உருவாக்கப்படுவதால் தான் கவிதைகளின் தரம் வீழ்ச்சியடைந்திருக்கிறது.

நிலவன் :- எழுத்துத்துறைக்கு உங்கள் வருகை பற்றி கூறுங்கள் ?

செந்தூரன் :-  பாடசாலைக் காலங்களில் எனது ஆரம்ப கால கவிதைகளுக்கு கிடைத்த வரவேற்புற்கள் பாராட்டுக்கள் காலப்போக்கில் கவிதை எதுதல் என்ற ஒரு பொழுது போக்கை என்னுள் தோற்றுவித்து அந்த பொழுது போக்கை வகைப் படுத்த உதவின எனலாம். அதன் தொடர்ச்சி எழுத்துத்துறையில் என்னை தன்னிச்சையாகவே ஈடுபடுத்தியிருக்கிறது.

நிலவன் :- உங்களுக்கு எழுத்துத்துறையின் மேல் ஈடுபாடு வந்தது பற்றி…?

செந்தூரன் :-  எழுத்து மீதான ஈடுபாடு என்பதை விட கவிதை மீதான ஈடுபாடாகவே கருத வேண்டி இருக்கிறது என்பது கவிதை மீதான காதல் இயற்கை, புதிது புனைதல் மொழிரசணை, கற்பனை வளம், பிரபலியமான கவிஞர்கள் மீதான விருப்பு போன்ற விடையங்களில் செல்வாக்கில் இருந்து எனக்கு ஏற்பட்டது. நாளடைவில் சுயமாக தலைப்புக்களை தேர்ந்தெடுத்து கவிதை எழுதி வெளிப்படுத்தும் போது எங்களின் அண்மையில் இருந்து கிடைக்கப்பெறும் சாதகமான பின்னுட்டல்கள் ஈடுபாட்டில் எம்மை நிலைபெறச் செய்யும். கவிதை மீதான எனது ஈடுபாடும் அத்தகையதாகவே இருந்தது, இருந்துகொண்டிருக்கிறது.

நிலவன் :- உங்கள் கவிதை பயணத்தின் ஆரம்ப காலகட்டம் அதன் வளர்ச்சி பற்றிக் குறிப்பிடுங்கள்…?

செந்தூரன் :- கவிதைப் பயணத்தின் ஆரம்ப காலகட்டம் பாடசாலை நிகழ்வுகள் தான். வன்னியில் போராட்டம் சமூகத்தின் எல்லா தரப்பினரோடும் பிணைந்திருந்த விதம் நாம் நன்கு அறிவோம். அவ்வாறே பாடசாலைக் காலத்தின் ஆரம்பகாலக் கவிதைகளின் பாடுபொருள் விடுதலைப் போராட்டம் தழுவியதாகவே அமைந்திருந்தது.

2005 ஆண்டு கிட்டு அண்ணாவின் நினைவாக இடம்பெற்ற கவிதைப் போட்டிக்காக மாணவர்களை தெரிவு செய்த போதுதான் நான் முதன் முதலாக அடையாளம் காணப்பட்டேன். அதன் பிறகு ஆசிரியர்களின் நண்பர்களின் தலைப்புக்களுக்கு கவிதை எழுதும் முயற்சிகளில் ஈடுபட்டு பாராட்டுக்களை பெறுவேன். பின்னர் காலத்திற்கு காலம் பாடுபொருளை விரிவு படுத்தியதன் மூலம் பல்வேறு விடையங்களையும் எனது கவிதைகளில் முயச்சிக்கிறது.

நிலவன் :- “யாதுமாகி” நூலைத் தாங்கள் எழுதுவதற்கு உந்துதல் வழங்கிய காரணி எது..?

செந்தூரன் :- கவிதை நூலொன்றை வெளியிட வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. வளப்பற்றாக்குறை என்னை நீண்ட நாட்களாக பின்வாங்க செய்த போதும் தமிழ்த்துறை விரிவுரையாளர் சுதர்சன் அவர்கள், தமிழ்நேசன் அடிகளார் போன்ற துறைசார் நிபுணத்துவம் உடைய பெரியவர்களின் வலியுறுத்துகை “யாதுமாகி” நூல் வெளி வருபதற்கான உந்துதலாக இருந்திருக்கிறது.

நிலவன் :- நீங்கள் எழுதிய கவிதைகளில் உங்களை அதிகம் கவர்ந்த கவிதை ..?

செந்தூரன் :-  எனது காதல் கவிதைகள் தான் மற்றவர்களைப் பெரிதும் கவர்ந்ததாக இருந்திருக்கிறது. இதுவரை நான் எழுதிய நூற்றுக்கணக்கான கவிதைகளில் ‘ ஒரு பூ பாடும் பா ‘ என்ற கவிதை என்னை மிகவும் கவர்ந்தது தனது ஆயுளை எண்ணி ஒரு பூ கவலைப்படுவதாக அந்தக் கவிதை எழுதப்பட்டிருக்கிறது.

நிலவன் :- “ஒரு பூ பாடும் பா” என்னும் கவிதையினை கூறமுடிமா..?

செந்தூரன் :-  நிச்சயமாக,

பொழுதொன்றே வாழும் மாலை பழுதுண்டு வீழும்

ஒரு பூ பாடும் பூபாலம் கேள் பூலோகம்- மண்ணில்

எழுகின்ற உயிராயுள் ஆலை விழுதென்றே நீழும்

ஆனால் என்னாயுள் என்னை விரலொன்றே போதும் -காலை

எகின்ற பகலோன் என்னை ஏவுகிறான் பூமியடி

தொழுகின்ற பத்தன் பத்தன் தூவுகிறன் சாமியடி

மெழுகன்ற என்மேனி தீச்சீறை தூங்குமா –கெஞ்சி

அழுகின்ற தேனியின் கூச்நலைத் தாங்குமா

தினம் ஒன்றில் பிணம் என்றால் -எம்

இனம் மண்ணில் பிறப்பதேனோ. பூ

வனம் தன்னில் சினம் என்றால் பூமி

புனல்க் கண்ணைத் திறப்பதேனோ

கோதைமுடி தலையிருத்தல் கோல இதழ்ப் பூவெனக்கு

கொம்புமான் வலையிருத்தல் போன்று –துன்பம்

பாதையடி நிலையிருத்தல் பகலிரவே வாழ்க்கை

ஆழிப் பயணத்தே அலையிருத்தல் சான்று

போதை நிறை பொன்வண்டு பூத்தாடும்

என்னில் கூத்தாடும் காலை

பேதையெனைப் பெற்றமரம் பித்தல்ல

மகவென்றே மறந்து மண்போடும் மாலை

வண்ண மெட்டாய் என்னை வடித்தான்

வாழ்நாள் தன்னை ஒன்றாய் முடித்தான் – இறைவன்

சின்ன சிட்டாய் என்தேன் குடித்தான்

சிறகை விரித்தே பண்தான் படித்தான் -தன்

சின்னத் தாரம் சிரிக்க மின்னல் பூவென்னை

அன்னல் பரிசே கொடுத்தான் -அவள்

கன்னத் தோரம் தரிக்க கரத்தால் மீண்டும் பறிக்க

காலன் தரிசே எடுத்தான்

தண்டாடித் தோட்டம் தானிருக்கும் மலர் -மாலை

தலைவாடி தரைசாயலாம்- தினம்

கொண்டாடிக் கூட்டம் கோடி உலகிருக்க

இப்பூவிழிகள் மட்டும்

அன்றாடன் அலைகூடி ஙரைபாயலாம் -அல்லிப்பூ

கண்டாடும் வான்னிலவும் வளர்பிறை கொண்டிருக்க -இந்த

புள்ளிப்பூ தினம் திண்டாடித் தேயலாமா –வந்து

(யாதுமாகி நூலில் இருந்து )

நிலவன் :- உங்கள் முயற்சிக்கு தடையாக அமைந்த சந்தர்ப்பங்கள் உள்ளனவா..?

செந்தூரன் :- இந்தக் கேள்விக்கு அதிகமானோரிடம் கவலையுடன் கூடிய பதில் இருக்கும். என்னுடைய கவிதைகளின் அமைப்பு முறை, இறுக்கத் தன்மை தொடர்பாக மேல்நிலை எழுத்தாளர்கள் சிலர் விமர்சித்த சந்தர்ப்பங்கள் உண்டு. அதே விடையத்தை பாராட்டிய சிரேஷ்ட எழுத்தாளர்களும் இருக்கிறார்கள்.

கவிதையை முழுமையாக விளங்கிக் கொள்ள முடியாத வாசகர்கள், நண்பர்களின் கருத்துக்களை தடைகளாவோ அல்லது எதிர் மறையாகவோ எடுக்கவில்லை. எந்தக் காரணத்திற்காகவும் யாருக்காகவும் எனது கவிதை அமைப்பு முறையை மாற்றிக்கொள்ள நான் ஒருபோதும் எத்தனிக்கப் போவதில்லை. எனது முயற்சிகளுக்கு தடையாக இருப்பவர்கள் எனது வளர்ச்சிக்கு தடையாக இருக்கப் போவதில்லை.

நிலவன் :- ஒரு எழுத்தாளனின் முக்கிய அடையாளமாக எதை நினைக்கிறிர்கள்..?

செந்தூரன் :-  எழுத்தாளனாக ஒருவன் தன்னை அடையாளப்படுத்த அல்லது பிறரால் அடையாளப் படுத்தப்பட குறித்த எழுத்துத் துறையின் தரம் மட்டுமே அவசியமாகிறது. சுய உணர்வுகளை வெளிப்படுத்த தேர்ந்தெடுக்கும் மொழியின் மீதான சாதாரண அறிவு போதுமானது. கல்வி தொடர்பில் கீழ்மட்டத்தில் இருப்பவர்கள் எழுத்தாளர்களாக பரிணமிப்பதை கல்வியாளர்கள் ஏற்றுக் கொள்ளாமல் அல்லது ஒத்துளைக்காமல் இருப்பது வேதனைக்குரியது.

நிலவன் :- ஒரு எழுத்தாளன் அறிஞராகவும் அல்லது கல்வியாளரக இருக்க வேண்டிய அவசியம் இருக்கின்றதா..?

செந்தூரன் :-  அறிஞர்கள் எழுத்தாளர்கள் ஆவதை விட சாதாரண வகுப்பினர் எழுத்து துறையில் ஈடுபடுவது சமூகத்திற்கு பன்மடங்கு பயன் தரும். தாமே தமது ஏதோவொரு இலக்கிய முறையில் வெளிப்படுத்த ஏதுவாக இருக்கும். சமூகத்தில் எழுத்தாளனின் தரம் என்பதற்கும் அப்பால் சமூகப்பொறுப்பு அல்லது சமூக அக்கறை குறித்த எழுத்தாளனை அடையாளப்படுத்துகிறது.

நிலவன் :- உங்களுக்கு மிகவும் விருப்பமான எழுத்தாளர்கள் பற்றிச் சொல்லுங்கள்..?

செந்தூரன் :- வையிரமுத்து என்கிற கவிஞனுக்கு இணையாக என்னைப் பொறுத்த அளவில் இதுவரை யாரும் தோன்றவில்லை. புதுவை இரத்தினதுரை அவர்களின் கவிதைகள் எனக்கு பிரியமானவை.

நிலவன் :- யாருடைய புத்தகங்களை அதிகம் வாசிப்பீர்கள்..?

செந்தூரன் :-  சமகாலத்தில் ஈழத்தில் வெளி வருகின்ற கூடுதலான நூல்களை வாசிக்கிறேன். நல்ல கவிஞர்கள் என்று யாராவது சுட்டிக்காட்டும் போது அவை யாருடையவையாக இருந்தாலும் வாசிப்பேன். எந்தக் கவிஞரையும் மையப்படுத்தி அவரின் புத்;தகங்களை அதிகமாக வாசிக்கிறேன் என கூறமுடியாது.

நிலவன் :- தமிழரின் கலை கலாசார பண்பாடுகளைப் பாதுகாப்பதில், இன்றைய நவீன, நாகரிக வளர்ச்சி எவ்வகையான ஆதிக்கத்தினைச் செய்கின்றது என நினைக்கின்றீர்கள்..?

செந்தூரன் :-  நவின நாகரிக வளர்ச்சி தமிழனின் கலை, கலாச்சாரம், பண்பாடுகளை பாதுகாப்பதில் சாதகமான தாக்கங்களைவிட பாதகமான விளைவுகளையே அதிகம் உண்டு பண்ணியிருக்கிறது. சம்பிரதாயங்கள் பெறுமதிகள். சமூக விழுமியங்கள் நாகரிக வளர்ச்சியில் மருவிப் போயிருக்கின்றன. நவினத்துவத்தால் கலை, கலாச்சாரம் சார்ந்த சான்றுப்படுத்தல்களில் முன்நேற்றம் அல்லது வளர்ச்சி ஏற்பட்டிருப்பதையும் நாம் ஏற்க வேண்டி இருக்கிறது.

நிலவன் :- நெருக்கடிகளைப் பதிவு செய்வதில் உங்களின் பங்கு பற்றிக் கூறுவீர்களா..?

செந்தூரன் :-  மிகவும் அவசியமான கேள்வி 2009 இற்கு முன்னர் வடபகுதியின் வளர்ச்சிகள் வினைத்திறனாகப் பயன்படுத்தப்பட்டன பாதுகாக்கப்பட்டன பயன்படுத்தப்பட்டன போருக்கு பிந்திய காலத்தில் அருமையான வளங்கள் சூறையாடப் படுகின்றன. சந்தைப் படுத்தல் என்பதற்கு அப்பால் போதுமான உற்பத்திகளை மேற்கொள்ள முடியாத நிலை உருவாகி இருக்கிறது.

நிலவன் :- போருக்கு பிற்பட்ட சமூக பொருளாதார சவால்கள் பற்றிச் சொல்லுங்கள்?

செந்தூரன் :- தொடர்பாடல் போக்குவரத்து மிஞ்சாரம் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளின் விருத்தி பொருளாதாரத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்திய போதும் போருக்கு பிந்திய காலத்தில் சமமான முறையில் வாழ்க்கைத் தரம் உயர்வடையவில்லை.

நிலவன் :- போருக்கு பிட்பட்ட மக்களின் உளவியல் நிலை பற்றி..?

செந்தூரன் :- பல்வேறு சமூகத்தவர்களும் பிரவேசிக்க கூடியதாக இருப்பதால் வடக்கில் பல சமூக சீர்கேடுகள், இலஞ்சம், போதை பொருட்பாவனைகள்,அதிகரித்து இருக்கிறது. ஒப்பிட்டு ரீதியில் போருக்கு பிந்திய காலத்தில் சமூக ரீதியான சவால்களும் அதிகரித்து இருக்கிறது. போருக்கு பிந்திய காலத்தில் ஒவ்வொரு வீடுகளிலும் மாற்றுத் திறனாளிக ள் ஒவ்வெரு குடும்பங்களிலும் காணாமல் போனவர்கள், இறந்தவர்கள் என்று நிலத்தில் அதிகம் காணப்படுகின்றார்கள் ஆதிகமான பெண் தலைமைத்துவ குடும்பங்கள் உருவாகி இருக்கின்றன. சமூக சீர்கேடுகளும் அதிகிரிக்கும் நிலையில் பெருன்பான்மை உறவுகளின் மனநிலை ஏமாற்றத்திலும் அச்சத்திலும் தான் இழையோடிப் போயிருக்கின்றது.

நிலவன் :- வாழ்வாதாரம் பற்றிய செயல் திட்டம் அதிகம் வெற்றி பெற்றமைக்கு காரணம் ..?

செந்தூரன் :- யுத்தத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட எம் உறவுகளில் அதிகமானோர் எவ்வித ஆற்றுப்படுத்தல்களும் இல்லாமல் நடைபிணங்களாகவே திரிகிறார்கள். நன்கொடைக்கும் வாழ்வாதார செயற்திட்டங்களுக்கும் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. நன்கொடைகள் வழங்கப்படாமல் சுய திறன்களை அவற்றுக்கு ஏற்ப கருத்தில் கொண்டு வாழ்வாதார செயற் திட்டங்களை அமுல்படுத்தப்படுவதால் பயனாளிகளின் தொடர் நலன்களை அனுபவிக்கின்றமை வாழ்வாதாரம் பற்றிய செயற்திட்டங்களின் வெற்றிக்கு காரணம். நன்கொடைகள் பயனாளிகளை முயற்சி செய்ய தூண்டுதல் குறைவாகவே காணப்படுகிறது வாழ்வாதார செயற்திட்டங்கள் பயனாளிகளின் சுய திறன்களை விருத்தி செய்கின்றது.

நிலவன் :- உங்களைப் போன்ற இளம் எழுத்தாளர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்..?

செந்தூரன் :- ஏந்த விதமான முயற்சிகளிலும் ஈடுபடுபவர்களும் விமர்சிப்பார்கள் அதே போல வெற்றி பெற்று உயர் நிலையில் இருக்கும் ஒரு சிலரும் வளர்ந்து வருபவர்களை கீழே தள்ளுவார்கள், விமர்சிப்பார்கள் இந்த இரு தரப்பினரின் கருத்துக்களையும் பொருப்படுத்த அவசியம் இல்லை. உங்களுடைய படைப்புக்களின் உங்களின் தனிப்பட்ட ஆளுமைகளை வெளிப்படுத்தும் அதேவேளை சமூக அக்கறையோடு இணைந்ததாக அவற்றை பிரசவியுங்கள் ஏன்னெனில் உங்கள் படைப்புக்களின் நிலையான தன்மையும் உங்களின் அடையாளமும் நீங்கள் வாழும் சமூகம் சார்ந்தே அமைகிறது.

நிலவன் :- அடுத்த கட்டமாக ஏதேனும் முயற்ச்சியில் ஈடுபடவுள்ளீர்களா..?

செந்தூரன் :- ஆம் இந்த வருட இறுதிக்குள் எனது இரண்டாவது நூலையும் அதன் ஒலி வடிவத்தையும் ஆவணப் படுத்துகிறேன். நானும் எனது உறவுகளும் அனுபதித்த யுத்தத்தின் வலிகளையும் மாறாத வடுக்களின் தடயங்களையும் தாங்கிஅ அந்ஙால் வெளிவரவிருக்கிறது.

நிலவன் :- உங்கள் படைப்புக்களை பார்ப்தற்கு நானும் ஆவலுடன் இருக்கின்றேன் . உங்கள் முயற்சிகள் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்.

செந்தூரன் :- நன்றி

-நிஜத்தடன் நிலவன்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More