விளையாட்டு

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயோர்க்கில் இன்று ஆரம்பமாகின்றது


அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயோர்க்கில் இன்று ஆரம்பமாகி செப்ரம்பர் 10ம் திகதிவரை இடம்பெறவுள்ளது.  அதிகளவில் காயங்களாலும் வேறு காரணங்களாலும் பாதிக்கப்பட்டுள்ள பல டென்னிஸ் வீரர்கள் இந்தப் போட்டியிலிருந்து விலகியுள்ள நிலையில் , இந்தத் தொடரில் யார் வெல்வார்கள் என்பதை எதிர்வுகூற முடியாத நிலையில் காணப்படுகிறது.

தற்போதைய முதல்நிலை வீரரான ரபேல் நடாலுக்கும், விம்பிள்டன் சம்பியனான ரொஜர் பெடரருக்கும் இடையிலேயே, பிரதான போட்டி ஏற்பட்டுள்ளதனால் இருவரும் அரையிறுதிப் போட்டியிலேயே சந்திக்கும் வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகின்றது.

பெண்கள் ஒற்றையர் பிரிவில், செரினா வில்லியம்ஸ், விக்டோரியா அஸரெங்கா ஆகியோர், இத்தொடரில் பங்குபற்றவில்லை என்பதனால் இத்தொடரை யார் கைப்பற்றுவர் என்பதில், தெளிவற்ற நிலைமை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply