எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் இன்று பேருந்து ஒன்று கனரக வாகனம் ஒன்றுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். பிரதான வீதி ஒன்ளின் ஊடாக 62 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த ஒரு சுற்றுலா பேருந்து எதிர்திசையில் வேகமாக வந்த கனரக வாகனத்துடன் மோதியதால் பேருந்து வீதியின் அருகிலுள்ள பள்ளத்தில் விழுந்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த விபத்தில் 42 பயணிகள் காயமடைந்ததாகவும் அவர்களை மீட்டு மருத்ததுவமனைகளில் அனுமக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் சிலரது நிலை மோசமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
எகிப்தில் முறையான வீதிப்பராமரிப்பின்மையினால் ஆண்டுதோறும் சுமார் 12 ஆயிரம் பேர் வீதி விபத்துகளில் உயிரிழந்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love
Add Comment