இலங்கை பிரதான செய்திகள்

இப் பேரவலம் இனிமேலும் தொடரக்கூடாது – வடமாகாண கல்வி அமைச்சர்.

தற்சமயம் க.பொ.த. உயர்தரப் பரீட்சை எழுதிக் கொண்டிருக்கும் ஆறு மாணவர் கள் நேற்று மாலை மண்டைதீவு கடலில் மூழ்கி பரிதாபமாக மரணித்த பேரவலச் செய்தி அதிர்ச்சியையும் மிகுந்த மனவேதனை யையும் அளிக்கின்றது. அதிகரித்து வரும் வீதி விபத்துக்கள், புகையிரதக் கடவை விபத்து;ககளைத் தடுப்பதற்கான அல்லது குறைப்பதற்கான முயற்சியில் நாம் ஈடுபட்டு;க கொண்டிருக்கும் வேளையில் பாதுகாப்பற்ற படகுப் பயணத்தின் மூலம், ஆறு மாணவர்களை நாம் இழந்தது என்பது மேலும் வேதனையைத் தருகின்ற சம்பவமாகும்.

எமது சமுதாயம் பொதுவாக மக்கள் தொகயிலும் குறிப்பாக ஆண்களின் தொகை யிலும் வீழ்ச்சி அடைந்து கொண்டு வரும் வேளையில் கல்வித் தரத்தை மேம்படுத்தி எமது பலத்தை அதிகரிக்க வேண்டிய நிலையில் நாம் உள்ளோம். அதனை நோக்கியே  எமது திட்டங்களும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வேளையில் கல்வியில் உயர் தரத்தில் உள்ள ஒரு சமுகத்திற்குப் பலம் சேர்க்கவேண்டிய இந்த ஆறு மாணவர்களின் இழப்பும் ஜீரணிக்க முடியாத தாகும்.

இவ்விழப்புக்கள் அவர்கள் சார்ந்த குடும்பங்களுக்கு மட்டுமின்றி தமிழ் சமூகத்திற்கும் பேரிழப்பாகும். இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வரும் அலட்சிய மனோபாவமும் இவ்வாறான இழப்புக்களுக்கு ஒரு  காரணமாகும். எதிர் காலத்தில் இத்தகைய இழப்புக்கள் எதுவும் நடைபெறாவண்ணம் பெற்றோர், பொறுப்புணர்வுடனும், எச்சரிக்கையுடனும் வழிகாட்டி வளர்க்கவேண்டும் என்ற பணிவான வேண்டுகோளை இவ்வேளையில் விடுப்பதுடன் பாதுகாப்பற்ற இத்தகைய கேளிக்கை நிகழ்வுகளில் எவரும் ஈடுபட வேண்டாம் என்றும் இளைஞர்களைத் தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

தமது பிள்ளைகளின் இன்னுயிர்களை இழந்து வாடும் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும்.நல்ல மாணவர்களை, நண்பர்களை இழந்து வாடும் பாடசாலைச் சமுக்ததிற்கும் எனத ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்;க் கொள்கின்றேன். இவைபோன்ற துயரமான சம்பவங்கள் இனிமேலும் நிகழா திருக்க விழிப்புறுக என மாணவர்க ள் இளைஞர்களை மீண்டும் வினயமாக வேண்டிக் கொள்கின்றேன். ஆறு இளைஞர்களினதும் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றேன்

  க.சர்வேஸ்வரன்,  வடமாகாண கல்வி அமைச்சர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers