இலங்கை கிரிக்கட் தெரிவுக் குழு தலைவர் சனத் ஜயசூரிய உள்ளிட்ட தெரிவுக்குழு உறுப்பினர்கள் பதவிவிலகியுள்ளனர். அவர்களது பதவி விலகலுக்கான கடிதம் இன்றையதினம் விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்திய அணிக்கு எதிரான நான்காவது ஒரு நாள் போட்டியின் போது இலங்கை அணியின் தலைவராக வேகபந்து வீச்சாளர் லசித் மலிங்க நியமிக்கப்பட்டுள்ளார். உபாதை காரண சமரா கபுகேதர விளையாட முடியாததை அடுத்தே, லசித் மலிங்க தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்திய அணிக்கு எதிரான நான்காவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நாளையதினம் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Add Comment