இலங்கை

கட்சியின் 66ம் ஆண்டு நிறைவு நிகழ்வின் பின்னர் கட்சி ஒழுங்கமைக்கப்படும் – துமிந்த திஸாநாயக்க


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கட்சியின் 66ம் ஆண்டு நிறைவு நிகழ்வின் பின்னர் கட்சி ஒழுங்கமைக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்  அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் ஒழுக்க விதிகளை மீறிச் செயற்படுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ள அவர் கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் துரித கதியில் மேற்கொள்ளப்படும் என   தெரிவித்துள்ளார். கொழும்பு கெம்பல் பார்க் மைதானத்தில் சுதந்திரக் கட்சியின் 66ம் ஆண்டு நிறைவு நிகழ்வுகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Leave a Reply