விளையாட்டு

2023 வரை விளையாட தயாராக இருக்கிறேன் – லசித் மலிங்கா


இலங்கை அணிக்காக தனது 40 வயது வரை விளையாட தயாராக இருக்கிறேன் என இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித்  மலிங்கா தெரிவித்துள்ளார்.   34 வயதாகும் மலிங்கவின உடற்தகுதி குறித்து அண்மைய நாட்களில் விமர்சனங்கள் எழுப்பப்படும் நிலையில் தான்  2023 வரை விளையாட தயாராக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் தான் காயம் காரணமாக    19 மாதங்களாக விளையாடவில்லை எனவும்  அதற்குப் பின் இரண்டு மூன்று தொடர்களில் மாத்திரமே விளையாடியுள்ளதாகவும்  தற்போது தனது உடல் நல்ல நிலைமைக்கு திரும்பிவிட்டதாக உணர்வதாகவும் தெரிவித்துள்ளார்.

மீண்டும் உடற்தகுதி பெறுவதற்கான அனைத்து சிகிச்சைகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்த அவர்    தொடர்ந்து 10 ஓவர்கள் வீச முடியும் என்ற நிலையை எட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply