Home விளையாட்டு இலங்கை இந்திய அணிகளுக்கு இடையிலான 4வது ஒருநாள் போட்டியிலும் இந்தியா வெற்றியீட்டியுள்ளது

இலங்கை இந்திய அணிகளுக்கு இடையிலான 4வது ஒருநாள் போட்டியிலும் இந்தியா வெற்றியீட்டியுள்ளது

by admin

இன்று இடம்பெற்ற இலங்கை   இந்திய அணிகளுக்கு இடையிலான 4வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 168 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.

போட்டியின் நாணயசுழற்சியில் வென்ற இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
அதன்படி இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 375 ஓட்டங்களைப் பெற்று 376 ஓட்டங்கள்   என்ற   வெற்றி இலக்கை இலங்கை அணிக்கு நிர்ணயித்தது.

அதில் ரோகித் சர்மா 104 ஓட்டங்களையும் கோலி 131 ஓட்டங்களையும் பெற்றதுடன்  ஆட்டமிழக்காது இறுதி வரை களத்தில் இருந்த பாண்டே 50 ஓட்டங்களையும் மஹேந்திர சிங் தோனி 49 ஓட்டங்களையும் பெற்றனர்.

பதிலுக்கு  களமிறங்கிய இலங்கை அணி 42.4 ஓவர்களில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 207 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.  அதிக பட்சமாக மெத்திவ்ஸ் 70 ஓட்டங்களைப் பெற்றார்.

ஏற்கனவே 3 போட்டிகளையும் வென்றுள்ள  இந்திய இன்று நான்காவது போட்டியிலும் வெற்றியீட்டியுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More