உலகம்

நைனிவா மாகாணம் விடுவிக்கப்பட்டுள்ளதாக ஈராக் அறிவிப்பு


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஈராக்கின் நைனிவா மாகாணம் விடுவிக்கப்பட்டுள்ளதாக ஈராக் அரசாங்கம் அறிவித்துள்ளது. ஐ.எஸ் தீவிரவாதிகளிடமிருந்து முழு  அளவில் மாகாணம் விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இந்த மாகாணத்தின் டெல் அபார் மாவட்டத்தையும் ஈராக்கிய படையினர் ஐ.எஸ் தீவிரவாதிகளிடமிருந்து மீட்டிருந்தனர். நைனிவா மாகாணத்தை முழுமையாக படையினர் கட்டுப்பாட்டுக் கொண்டு வந்துள்ளதாகவும் இது மகிழ்ச்சி அளிப்பதாகவும் ஈராக்கிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

அண்மைய நாட்களாக ஐ.எஸ் தீவிரவாதிகள் ஈராக்கில் பாரிய பின்னடைவை எதிநோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, ஈராக்கிய படையினர் நைனிவா மாகாணத்தை கைப்பற்றிய போதிலும் பல முக்கிய விடயங்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியம் காணப்படுவதாக ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு எதிரான அமெரிக்க கூட்டுப் படையினர் அறிவித்துள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply