குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஊழல் மோசடிகள், லஞ்சம் பெற்றுக் கொள்வது தொடர்பில் நெகிழ்வுத்தன்மை இருக்க முடியாது என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பு பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மோசடிகளில் ஈடுபடுவோர் சட்டவிரோத ஆட்கடத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்களுக்கு ஆதரவளிப்பதுடன், நீதியான அரசாங்கங்களை சீர்குலைக்க முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் அனைத்து நிலைகளிலும் நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைப் பாதுகாப்புப் படையினர் புதிய சவால்களை எதிர்நோக்கக் கற்றுக்கொள்ள வேண்டுமெனவும் பிராந்திய வலயததில் பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க ஏனைய நாடுகளுடன் இணைந்து செயற்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Spread the love
Add Comment