இந்தியா பிரதான செய்திகள்

இணைப்பு 2 சேலம் மாணவி வளர்மதி இன்று பிணையில் விடுதலை


என்ஜிசிக்கு எதிராக துண்டுபிரசுரங்களை விநியோகித்தமை தொடர்பில் குண்டர்  தடைச்சட்டத்தில் கைது  செய்யப்பட்ட  சேலம் மாணவி வளர்மதி  இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கதிராமங்கலம், நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிராக துண்டுபிரசுரங்களை விநியோகித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்த   மாணவி வளர்மதி ,  நக்சலைட்டுகளுக்கு ஆள் சேர்ப்பதாக தெரிவித்து கடந்த ஜூலை 13ஆம் திகதி கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ்  சிறை வைக்கப்பட்டார்.

இந்த நிலையில் குண்டர் தடுப்புச் சட்ட நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி, அவரது தந்தை மாதையன் உயர்நீதி மன்றத்தில்  தாக்கல் செய்ததனையடுத்து குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ வளர்மதியை கைது செய்த நடவடிக்கையை நீதிமன்றம்  ரத்து செய்து உத்தரவிட்டது.

இதையடுத்து சிறை நடைமுறைகள் முடிந்து, வளர்மதி இன்று மாலை விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டம்    ரத்து செய்யப்பட்டுள்ளது

Sep 5, 2017 @ 06:13

ஓஎன்ஜிசிக்கு எதிராக துண்டுபிரசுரங்களை விநியோகித்தமை தொடர்பில் கைது  செய்யப்பட்ட  சேலம் மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம்  ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

கதிராமங்கலம், நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிராக துண்டுபிரசுரங்களை விநியோகித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்த   மாணவி வளர்மதி ,  நக்சலைட்டுகளுக்கு ஆள் சேர்ப்பதாக தெரிவித்து கடந்த ஜூலை 13ஆம் திகதி கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டார்.
இந்நிலையில், மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை ரத்து செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வளர்மதியின் தந்தை மாதையன் தொடர்ந்த வழக்கு தொடர்பிலேயே  சென்னை உயர் நீதிமன்றம் இன்று   இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த  உத்தரவை தொடர்ந்து வளர்மதி சிறை நடைமுறைகள் முடிவடைந்து வியாழக்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை சிறையில் இருந்து விடுவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சேலம் மாணவி வளர்மதி கோவை சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டம் ஆரம்பித்துள்ளார்:-

Sep 1, 2017 @ 03:45

தன்மீது உள்ள குண்டர் சட்டத்தை நிபந்தனை இன்றி திரும்ப பெற வலியுறுத்தி சேலம் மாணவி வளர்மதி கோவை சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டம் ஆரம்பித்துள்ளார்.

தமிழ்நாடு பொதுநல மாணவர் எழுச்சி இயக்க சேலம் மாவட்ட பொருளாளரும் பெரியார் பல்கலைகழக மாணவியுமான வளர்மதி கடந்த ஜூன் மாதம் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் கோவை மத்திய சிறையில் சிறை வைக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் சிறையில் உள்ள வளர்மதி நெடுவாசல், கதிராமங்கலம் ஹைட்ரோ கார்பன் திட்டம், கடலூர், சிதம்பரம் மாவட்டங்களில் அமுல்படுத்தபடும் பெட்ரோ இரசாயனத் திட்டம் ஆகியவற்றை கைவிட வலியுறுத்தியும், சிறையில் தன்னை பார்க்க வருபவர்களை உளவுத்துறை மிரட்டுவதை கண்டித்தும், தன்மீது உள்ள குண்டர் சட்டத்தை நிபந்தனை இன்றி திரும்ப பெற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி இன்று காலை முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers