விளையாட்டு

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – பெடரரும் – பில்ஸ்கோவாவும் 3-வது சுற்றுக்கு முன்னேறினர்:-

அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் பெடரரும் பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் பில்ஸ்கோவாவும் 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

நியூயோhர்க்கில் ல் நடைபெற்று அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்று ஆட்டத்தில் மூன்றாம்நிலை வீரரான ரோஜர் பெடரர், ரஸ்யாவின் மிக்கேல் யூஷ்னியை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப்போட்டியில் பெடரர், 6-1, 6-7, 4-6, 6-4, 6-2 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றார்.

இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ஆறாம்நிலை வீரரான டோம்னிக் தெயிம், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸை 6-4, 6-4, 4-6, 7-5 என்ற செட்கணக்கில் வீழ்த்தி மூன்றாம் சுற்றுக்கு முன்னேறினார்.

அத்துடன் மோன்பில்ஸ், கோபின் ஆகியோரும் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்று போட்டிகளில் வெற்றி பெற்றனர். அதேவேளை பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற இரண்டாம் சுற்று போட்டியில் முதல்நிலை வீராங்கனையான பில்ஸ்கோவா, அமெரிக்காவின் நிக்கோல் கிப்ஸை 2-6, 6-3, 6-4 என்ற செட்கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றார்.

இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில், அமெரிக்காவின் வீனஸ் வில்லியன்ஸும், பிரான்சின் டோடினும் போட்டியிட்;ட போட்டியில் வீனஸ் 7-5, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply